திங்கள், 23 ஆகஸ்ட், 2010

சூரிய சக்தி

சூரியன் தான் உலக உயிர்களுக்கெல்லாம் ஆதியும் அந்தமும் ஆகும். அனைத்து உயிருள்ள, உயிரற்ற பொருட்களுக்கும் அவற்றின் பெருக்கத்திற்கும் இறப்பிற்கும் காரண கர்த்தாவாகும்.ஆகவே தமிழன் சூரியனை முழு முதல் கடவுளாகக் கொண்டாடினான்.
அவன் எதையுமே அறியாமல் செய்வதில்லை. ஆம்.இந்த உலகத்தின் தற்போதைய தேவையான எரிசக்தியை வாரி வாரி வழங்கப் போவதும் சூரியனே.மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஈடு கொடுக்கமுடியாததால் அனைத்து பொருட்களின் விலைகளும் உயர்ந்துகொண்டே போகின்றன.உற்பத்தி செலவுகள் அதிகரிக்கின்றன.டீஸல் போன்ற மரபு சார்ந்த எரிபொருட்கள் தட்டுப்பாட்டின் காரணத்தால் அவற்றை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடுகள் பொருளாதார ரீதியில் உலகைக் கட்டுப்படுத்துகின்றன.
இதற்கெல்லாம் தீர்வு என்ன?
"சூரியன்"
எப்படி?
"சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் தயாரித்தல்- நீரை சூடாக்கல்"

ஆரம்ப முதலீடு அதிகமாக இருந்தாலும் சரியான பராமரிப்பின் மூலம் குறிப்பிட்ட ஆண்டுகளில் அசலையும் எடுத்து அதுபோல நான்கு மடங்கு லாபமும் பெறலாம்.
சிலிகான் தகடுகள் சூரிய ஒளியை மின்சாரமாக மாற்ற பயன்படுத்தப்படுகின்றன.ஆறு யூனிட் மின்சாரம் தயாரிக்க ஒரு மீட்டர் ஸ்கொயர் அளவுள்ள சோலார் பேனல் தேவை. ஒரு வாட் மின்சாரம் தயாரிக்கக்கூடிய பேனலின் தற்போதைய விலை சுமார் ரூ.300 ஆகும்.
சூரிய ஒளியினை நீரை சூடாக்க பயன்படுத்துவதன் மூலம் பெருமளவு எரிபொருள் சேமிக்கப்படுகிறது.100 லி அளவுள்ள வாட்டர் ஹீட்டர் சுமார் ௨0,000 ரூ ஆகும்.இதனை வாங்குபவர்களை ஊக்குவிப்பதற்காக அரசாங்கம் ரூ.3000 மானியமாக வழங்குகிறது. 100 லி ஹீட்டர் ஆண்டிற்கு கிட்டத்தட்ட 1500 யூ மின்சாரத்தினை சேமிக்க உதவுகிறது. JNNSM திட்டத்தின்படி 1 யூ மின்சாரம் 15 ரூ க்குமேல் மதிப்பிடப்படுகிறது என்றால் சேமிப்பினை கணக்கிட்டுக்கொள்ளவும்.
சூரிய ஒளியினை நிலக்கரிக்கும் டீசலுக்கும் மாற்றாகப் பயன்படுத்தும்போது சுற்றுப்புற தூய்மை கெடுவதில்லை. புவி வெப்பமடைவது கட்டுப்படுத்தப்படுகிறது.ஆகவே வசதியும் வாய்ப்பும் உள்ளவர்கள் சூரிய ஒளியினைப் பயன்படுத்தி உலகிற்கும் நாட்டிற்கும் சேவை செய்ய முன்வர வேண்டும்.
இந்தியாவில் இதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் நாம் அனைவரும் சூரிய ஒளியினைப் பயன்படுத்தினால் வெளிநாடுகளிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்யத் தேவையில்லை. நாம் சூரியஒளியின்மூலம் எரிசக்தியை(மின்சாரம்) பெருமளவில் உற்பத்தி செய்து நம் தேவைக்குப் போக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்.ஏனென்றால் நம் நாடு ஆண்டின் (குறைந்தது 300 நாட்கள்) பெருமளவு சூரிய ஒளியை பெறுகிறது.ஆகவே நம் நாடு வல்லரசாகின்ற நாள் நெருங்கி விட்டது.தயாராக இருங்கள்.